STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

நீயின்றி

நீயின்றி

1 min
360

வள்ளலே... வானவனே...


கோடையில் உன்னைக் காணவெறுத்தவரும் உண்டு வாடையில் உன்னைக் காணதுடித்தவரும் உண்டு மேகங்கள் உனக்கு திரையிட்டதும் உண்டு!கார்காலத்தில் மேகங்கள் சிறை வைத்ததும் உண்டு கடும் கோடையில் தேகங்கள் வியர்த்ததுமுண்டு காலையிலும் மாலையிலும் செவ்வொளி வீசி சிந்தை கவர்ந்ததுண்டு காலை மாலை கணக்காய் உதித்து மறைந்து விந்தை புரிந்தது உண்டுகடிகாரம் கண்டதில்லை காலநேரம் உணர்த்திடும் கடிமுள்நீயே வீட்டில் விளக்கு ஒளிர்ந்ததில்லை பகலில் ஒளிர்ந்திடும் ஒளிவிளக்கு நீயே! உலகுக்கு எல்லாம் ஒரே விளக்கும் நீயே!


கடவுளை நேரில் கண்டதில்லை!நாங்கள் கண்ட கடவுளும் நீயே! செடி கொடி எல்லாம் உணவை தயாரிக்க ஒளி மூலமும் நீயே வெப்பம் மூலமும் நீயே மின் கட்டணம் செலுத்திய தில்லை !கட்டத் தவறியதால் இணைப்பை யாரும் துண்டித்ததில்லை !உன்னருமை புரியாத உலகம் உழன்று கொண்டிருக்கிறது மின் பற்றாக்குறையில் !கனன்று நின்றுகொண்டிருக்கிறது மின்வெட்டு என்று! தட்பத்தை தாங்க முடியாமல் உளற வைப்பவனும் நீ வெப்பம் தாளாமல் அலற வைப்பவனும்நீ காய்களை கனிய வைப்பவனும் நீ !நோய்களை தனிய வைப்பவனும் நீ! எத்தனை தூரம் உன் பயணங்கள் எத்தனை நிறங்கள் உன் கரங்கள்! 


தரம் பிரித்துப் பார்த்ததில்லை !தடம் பார்த்து சளைத்ததில்லை !ஓயாமல் உலகை சுற்றுகிறாய் !தலை சாயாமல் உலகை காக்கிறாய்!ஒருநாளும் அழுததில்லை !ஓய்வில்லை என சளைத்ததில்லை !நெருங்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும்... நீ இன்றி பகல் ஏது? பருவநிலை தான் ஏது ?பயிர்கள் ஏது? உயிர்கள் தான் ஏது?உன் வளம் கண்டு நிலம் வணங்கும் நீ இன்றி நிலன் அடங்கும்  உலகின் முதன்மையானவன் நீ உலகின் மூலமும் நீ தொடரட்டும் உன் பயணம்! வணங்கட்டும் இந்த தருணம் !மனிதா! கண்டிடாதே உழைப்பில் சலனம் !அதற்கு சூரியனே உதாரணம் !


ஒளிக்கதிர்களை உமிழ்வதால் கதிரவன் ஆனாய்! கோள்களுக்கு எல்லாம் தலைவனாய் திகழ்வதால் நாயிறு ஆனாய்! பகலில் ஒளியை பொழிவதால் பகலவன் ஆனாய் !அனலை அள்ளித் தருவதால் அனலி ஆனாய்!வெயிலை வாரி வழங்குவதால் வெய்யோன் ஆனாய்! அதிகாலை நடைபயணத்தில் மன அமைதியை தருகிறாய் புத்துணர்ச்சியை பொழிகிறாய் மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டுகிறாய்! உயிர்ச்சத்து டி அளிக்கிறாய்!உடல் எடையை குறைக்கிறாய்! புற்றுநோய்களை தடுக்கிறாய்! தோலுக்கு நன்மை பயக்கிறாய்!வள்ளலே வானவனேஆதவனே... பரிதியே!தினகரனே... தினமணியே...உனை என்ன சொல்லி அழைப்போம்?நீ தான் உலகின் மூலம்!நீயின்றி உலகே நிர்மூலம்!!! 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational