நீ....என் இந்திய தேசம்
நீ....என் இந்திய தேசம்
உன்னைக் கண்டதும்
கண்களுக்குள் ஒளிரும்
எண்ணற்ற ஒளி கீற்றுகள்!
கால்கள் இரண்டும் நடமிட
வேகமாய் துடிக்கும்
என் இதயத்தின் லயமே!
பூமியும் ஆகாயமும்
மெல்லிய தழுவலில்
சிலிர்த்து நின்றது
சில நொடிகளே!
தாய் மண்ணின் தொடுதலில்
என் பாதங்கள் மீண்டும்
கண்டிடுமோ ஒரு விடுதலையே!