முகமூடி கொள்ளைக்காரி
முகமூடி கொள்ளைக்காரி
மை போடவும் இல்லை,
மந்திரம் போடவும் இல்லை...
ஆனாலும் வசியம் செய்கிறாள்
என் வயதை
அவள் கண்களால்!
வழிமறிக்கவும் இல்லை,
ஆயுதம் ஏந்தவும் இல்லை....
ஆனாலும் வழிப்பறி செய்கிறாள்
இந்த முகமூடி கொள்ளைக்காரி
எந்தன் மனதை
காதல் என்னும் பெயரில்!