மருதாணியிடம் போட்டியா
மருதாணியிடம் போட்டியா
அழகியவளின் அழகிய
கரத்தில் மருதாணி
வைக்கிறாள்....
வைத்துகொண்டே வினா
எழுப்புகிறாள் - தோழி
அழகியவளிடம்....
இம் மருதாணி
எவ்வளவு சிவக்கிறதோ
அவ்வளவு தாம்
மன்னவனின் மீது
கொண்ட
காதல் அளவு தெரியும்.... என்று
நீ
எனக்கு போட்டியா?
என்று கூறி
கையில் இட்ட மருதாணியை
பார்த்து கொண்டே
சிரிக்கிறாள்.....
பின்பு தோழியை நோக்கி
கூறுக்கிறாள்
இந்த பேதை
பைத்தியக்காரி ஆவாள்
தோழி....
மன்னவன் இப்பேதையின்
மனதில்
வடுவாக உள்ளான்...
மருதாணியின் காலம்
குறிப்பிட்ட நாள்
மட்டுமே சிவப்பு பிரகாசத்தை
தன்
கரத்தில் காட்டும்... அதன் பின்....?
என் மன்னவனின்
மீது
இந்த பேதை கொண்டுள்ள
காதல் ....
தீ
காயத்தால் ஏற்படும் வடுவை விட
மேலானது....
