Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Abstract Drama Inspirational

5  

Shakthi Shri K B

Abstract Drama Inspirational

மறக்க முடிய பயணம்

மறக்க முடிய பயணம்

1 min
461


சிறு வயதில் என் கண்ணுக்கு தெரிந்தது ஒரு மிக பெரிய அதிசயம்,

வானில் இருக்கும் அந்த அதிசயத்தை கண்டு வியந்தேன்,

மேலே இருக்கும் அந்த விண்வெளிக்கு பறந்து செல்ல ஆசை கொண்டேன்.


என் அன்னை தினமும் என்னக்கு பல கதைகள் உரைப்பார் ,

அதில் பல கதைகள் விண்வெளியில் நடப்பது போல தான் கூறுவாள் அவள்,

அவளின் அன்பு கதைகளில் நானும் அந்த கதாபாத்திரமாக மாரி விண்வெளியில் பறந்தேன்.


ஒவ்வொருநாளும் என் வீட்டின் மொட்டைமாடியிலிருந்து எட்டி பார்த்து வியந்தேன்,

வானில் பறக்கும் பறவைகள் எவ்வளவு அருமையான வாழ்க்கையை வாழ்கின்றன,

ஒரு நாளாவது நானும் மேலே பறக்க ஆசை ஒன்றை கொண்டேன்.


வருடங்கள் பல கடந்து ஓடின எனக்கும் வயதானது ஆனால் விண்வெளி மட்டும் அப்படியே உள்ளது,

என் பேர குழந்தைகளுடன் விளையாடுவது அவர்களுக்கு விண்வெளி கதைகளை கூறுவதே என் வாழ்க்கை,

அன்று ஒரு நாள் என் மகன் என்னை ஓரிடத்து அழைத்து சென்றான்.


சற்றும் நான் எதிர் பார்கவில்லை அன்று விண்வெளியில் நான் பார்த்தேன்,

அது என் வாழ்வின் முதல் விமான பயணம் என் மனதின் மகிழ்ச்சிக்கு அளவில்லை,

நான் கண்ட கனா அன்று நிறைவேறியது என் வாழ்வின் மறக்க முடிய பயணம்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract