STORYMIRROR

நிலவின் தோழி கனி

Classics Inspirational Children

4  

நிலவின் தோழி கனி

Classics Inspirational Children

மனம் உண்டா

மனம் உண்டா

1 min
232

தன்னை பத்து மாதம் சுமந்த அன்னையை...

கடைசி வரை பார்த்துக்கொள்ள...

மனம் உண்டா?

தன்னோடு கூட பிறந்த சகோதரியை...

ஆதரவாய் பார்த்துக்கொள்ள....

மனம் உண்டா?

தன் குழந்தையை பெற்றெடுக்கும் மனைவியை...

பிரியமாய் மனம் வாடாமல் பார்த்துக்கொள்ள...

மனம் உண்டா?

தனக்கு மகளாய் பிறக்கும் சிசுவை...

அன்பாய் பாசமாய் பார்த்துக்கொள்ள...

மனம் உண்டா?

தன்னோடு சகதோழியாய் வேலைப் பார்க்கும் பெண்னை...

பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ள...

மனம் உண்டா?

யாரென்று தெரியாத பெண்னை...

கண்ணியமாய் காண...

மனம் உண்டா?

மனம் உண்டு எனில்...

பெண்னை போற்றவில்லை....

என்றாலும் தூற்றாதீர்கள் !!!!



Rate this content
Log in

Similar tamil poem from Classics