மலரே..என்..மகளே
மலரே..என்..மகளே


உன்னுடைய மொழியில் நானும் என்னுலகம் மறந்து போனேன் உன்னுடைய செல்லக் குறும்பில் என்னிதயம் மகிழ்ந்து போனேன்
மகளே என் மகளே
மலரே என் மலரே
வாசம் வீசும் பூவும் கூட
நேசம் பேசும் உந்தன் ஓடு
பாசம் பூசும் பிஞ்சு விரலும்
தோசம் நீக்கும் எந்தன் உயிரே
மகளே என் மகளே
மலரே என் மலரே
பிஞ்சு விரல் பாதம் ரெண்டும்
நெஞ்சு மீது ஏறி நின்று
கொஞ்சு மொழி பேசும் போது
பஞ்சம் எல்லாம் பறந்து போகும்
மகளே என் மகளே
மலரே என் மலரே
கோவம் வந்த போது எல்லாம்
பாப்பா முகம் பார்த்து நிற்க
பாவம் அந்தக் கோவம் கூட
கானல் நீராய்க் கரைந்து போகும்
மகளே என் மகளே
மலரே என் மலரே