மாற்றம்
மாற்றம்
காலத்திற்கு ஏற்ற மாற்றம்
மனிதர்களிடத்தில் மட்டுமல்ல!
எல்லா உயிர்களிடத்திலும் தான்!
புற்களைக் கொண்டே
புகலிடம் அமைத்த புட்கள்..?
இங்கே தூக்கி யெறியப்பட்ட
பாலிதீன் கொண்டே
பக்குவமாய்... பாதுகாப்பாய் ...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!
பறவைகளுக்கு பாலிதீன் கூட ஆயுதம் !
மாந்தனே!
நீ எத்தனை வல்லமை படைத்தவன் ஆயினும்
உன்னைப் போல் புலம்பி தீர்த்தார் யாருமிலர்!
குறைக் கூறியே வாழ்வை கழித்தோர்
பாரில் இவர்!
சூழலை ஏற்றுக் கொண்டால் தான்
வாழ்க்கை சுகமாகும்!
மாற்றத்தை தொற்றிக் கொண்டால் தான்
வாழ்க்கை சொர்க்கமாகும்!
பற்றிக் கொண்டால் தான்
வாழ்க்கை வெற்றியாகும்!
எட்டி நின்றால்
வாழ்க்கை எட்டிக்காய் தான்!
எட்டாக்கனி தான்!
மாற்றம் ஒன்றே மாறாதது!!
மாற்றம் தருமே ஏற்றம்!
மாற்றம் இல்லையேல் ஏமாற்றம்!
ஏற்றுக் கொள்வோம்
இச்சிறு பறவை போலே!
