STORYMIRROR

SHIVANI PRIYANGA

Fantasy Others

4  

SHIVANI PRIYANGA

Fantasy Others

மாலை நேர மயக்கம்

மாலை நேர மயக்கம்

1 min
324

கடற்கரை ஓரம்

விடிகாலை நேரம்

ஒரு கால தூரம்

நடைபோட நீ வேணுமே...

கால்கள் தீண்டும் அலைகளாய் உந்தன் கரங்களும் கரையனுமே...

அந்த கரைதலில் நானும் கொஞ்சம் நனையனுமே...

அதே நாளில்

அந்தி மாலையில்

உன் உடன் நடக்கும் அந்த கூட்டமான கடைவீதியில்,

நான் தூக்கும் பைகளை உந்தன் கைகள் ஏந்தனுமே...

அம்புட்டு சோர்வான இரவிலும்

அம்மாடி என நீ கொஞ்சிடனுமே...

உணவே உண்ணாமல் பசியாற்றும் உந்தன் பேச்சுக்கள் இன்னும் நீளனுமே...

தேயும் பிரையுடன்

யாரும் இல்லா ஒரு சாலையில் நம் நீண்டநெடு பயணத்தில் அந்த மின்விளக்குகளும் களைப்பாகட்டுமே....

இந்த ஆசைகள் எல்லாம் நான் கூற,

ஆசை மாறாமல் என் அசை நீ நிறைவேற்றிட,

ஒரு நாள் முழுதும் எனக்காக வேணுமே...


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy