குளிராக....
குளிராக....
1 min
285
உன் எண்ணங்களே போர்வையாக
என் மனக்குளிரினைப் போக்கிடும்
மனக் கண்களுக்குள் நிழலாடும்
உன் சாயலின் உருவ பிம்பங்கள்
என் கவிதை வரிகளுக்கு
தினமும் காதல் நீருற்றி வளர்த்திடுதே.
முத்தாய் பனித்துளிகளில்
காதல் வண்ணங்கள் பிரதிபலிக்க
காலை நேர சூரியனின்
கதகதப்பினில் சுகமாய்
லயித்திருக்கும் எங்கள் வீட்டுச்
செல்லப்பூனையாக என் மனது
இன்று ஏனோ உன்னிடத்தில்...