கடந்து சென்றவை
கடந்து சென்றவை
மெதுவாக மெதுவாக
நாங்கள் நடந்து சென்ற
பாதைகள் இன்று இல்லை
கனவுகள் கலையாத போதும்
வாழ்வில் ஒன்றும் இல்லை
நடைப்பிணமாக நித்தமும்
வாழும் வாழ்வினில்
உனைப்பற்றிய கேள்வி
ஒன்றே மிஞ்சியது
அதன் பதில் தெரியும் போது
நான் இங்கே இருப்பேனா?