STORYMIRROR

Latha S

Abstract Inspirational Others

5  

Latha S

Abstract Inspirational Others

கடல்

கடல்

1 min
1.3K


கருநீலக்கடலின் வண்ணம் 

காண்பவர் உள்ளத்தை கவர்வது திண்ணம்

நீர்வாழ் உயிரினங்களுக்கு நீங்காத அடைக்கலம்

நீரலைகள் கரை தொட்டு நிமிடத்தில் மறையும்.


மேலான கடல்நீர் சுவைத்தால் கரிக்கும்

மேகம் மூலம் மழையாக வந்தால் இனிக்கும்

மதியைக் கண்டவுடன் கடலும் பொங்கும்

மதியின் பிம்பத்தை சிறைபிடித்து மகிழும்.


முடியை கோதும் மெல்லிய கடல் காற்று

முகத்தில் ஒட்டும் மெதுவாய் உப்பு ஈரம்

குப்பென்ற மீன்வாடை நாசியை துளைக்கும்

குப்பத்து குப்பைகள் சிதறிக் கிடக்கும்

p>

கட்டுமரத் துண்டுகளும் சிப்பிகளும் காலில் இடறும்

காதலர்கள் சந்திக்க இடவசதி கொடுக்கும்.


சிறு நண்டு மணல்மீது குழிகீறி அலையும்

சிலவேளை அதை வந்து கடல் கொண்டு செல்லும்

இருளோடு வெளியேறி வலை வீசினாலும்

இயலாது தரவென்று கடல் கூறக்கூடும்.


அலையோசை காற்றுடன் இசையாக மாறும்

ஆனந்த ராகம் மனதுக்குள் ஊறும்

அலைமோதும் துயரங்கள் வடிந்து அடங்கும்

அலைபாயும் நெஞ்சுக்கு அமைதி கிடைக்கும்

கலங்கரை விளக்கொளியில் கவலைகள் பதுங்கும்

காலாற நடக்கயிலே கலக்கங்கள் ஒதுங்கும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract