கரத்தை நீட்டு
கரத்தை நீட்டு
உன் அழகை ரசித்தேன்!
உன் கனிகளை புசித்தேன்!
உன் காற்றினை சுவாசித்தேன்!
உன் தாளினை வாசித்தேன்!
உன் நீரூற்றினைப் பருகினேன்!
உன் குளிர்ச்சி கண்டு உருகினேன்!
ஆனால்...
உன் கொட்டும் இவைகளைக் கண்டு....
உள்ளம் சலித்தேன்! கொதித்தேன்!
உன் கிளைகளைக் துண்டித்தேன்!
உன் இலைகளைக் கொய்தேன்!
நீயோ...
வஞ்சமின்றி
உன் கிளைக்கரங்களால்....
கோடை வெயிலிலும்.....
குளிர் மழையிலும்
இலைக்குடை பிடிக்கிளறாய்!
சிரத்தைக் கொய்தாலும்...
கரத்தை துண்டித்தாலும்...
வேரை நீக்கி உயிரைப் போக்க துணிந்தாலும்...
இளைஞனே!
மரத்தைப் போல்
உரம் கொண்ட நெஞ்சு கொள்!
கரத்தை நீட்டு...! அறத்தைக் கூட்டு!
லஞ்சத்தை நீக்கு!
தஞ்சம் புகுந்தவனுக்கு....
பஞ்சம் போக்கு!
வாழ்வை பயனுள்ளதாக்கு!
