STORYMIRROR

Pearly Catherine J

Abstract Others Children

4  

Pearly Catherine J

Abstract Others Children

கனா

கனா

1 min
358

நம்ம ஊரு சனம் நாட்டு சனம் கண்ட கனா எல்லாம் கைக்கூடனும் என் கண்ணே என் கண்ணான கண்ணே!

 நீ நிம்மதியா வாழ நாட்டு வளம் செழிக்க தொழில்நுட்பம் வளரனும், பண்ணாட்டு வணிகம் பெருசாகனும் கண்ணே என் கண்ணான கண்ணே!

போர்கள் முடியனும் அமைதி நிலைக்கணும், அயலான் நாட்டோடு அன்பு பாராட்டானும் கண்ணே என் கண்ணான கண்ணே!

பெண்ணினம் வளரனும் வஞ்சம் ஒழியனும், பாரபட்சம் இல்லாம நாடு முன்னேறி செல்லனும் கண்ணே என் கண்ணான கண்ணே! 

பசி பட்டினி பஞ்சம் இல்லாம பிள்ளைங்க வளமா வாழனும், பட்டம் படிப்பு எல்லாம் பாத்து உலகம் மெச்சணும் கண்ணே என் கண்ணான கண்ணே! 

வம்சம் தழைக்கணும், ஜனத்தொகை கட்டுக்குள் இருக்கணும், கட்டுப்பாட்டோடு வாழனும் கண்ணே என் கண்ணான கண்ணே! 

கண்ணக்குழியில உன் புன்னகை நிழைக்கணும், காடு மேடு வாழ்ந்த மனுஷ ஜனம் எல்லாம் இப்போ காட அழிக்க காரணம் ஆச்சு கண்ணே என் கண்ணான கண்ணே! 

இந்த சூழல் மாறனும், சுற்றுப்புறம் மாறனும், சக உயிர மதிச்சு நடத்தனும்: இத எல்லாம் நா பாக்க எனக்கு கொடுத்து வெக்கணும் கண்ணே என் கண்ணான கண்ணே! 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract