கலப்பையின் அசுரபலம்
கலப்பையின் அசுரபலம்
கலப்பையின் அசுரபலம்..
உலகுக்கே புரிந்திருக்கிறது..
ஆழமாக உழுது ஆள்வோருக்கு
அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது
குடியரசின் வலிமையையும்..
குடியானவர்களின் வலியையும்
ஒருசேர காட்டியிருக்கிறது..
பிடிவாதத்தின் பிடியைத்தளர்த்தி..
மண்ணிலே வீழ்த்தியிருக்கிறது..
அமைதிப்போராட்டத்தின் வலிமையால்
ஆணவத்தின் ஆணிவேரினை
அசைத்து உழவின்
உயிரை மீட்டெடுத்திருக்கிறது
மக்களின் மனதின் உணர்வுகளை
மாண்புடன் பிரதிபலித்து
விவசாயத்தில் எந்த விடமும்
எந்த சாயமும் கலந்து
கரைபட்டுவிடாமல் தடுத்து
உயிரை காக்கும் உணவையும்
உணவு செய்யும் உழவையும்
முழுதாக மீட்டெடுத்த
வயல்வெளி வீரர்களை
விண்வெளி உயரத்தில்
வைத்து வணங்கிடுவோம்..
இரா.பெரியசாமி
