கல்லூரி ஒன்றிணைதல்
கல்லூரி ஒன்றிணைதல்
எதிர்பார்த்தும் எதிர்பாரமலும் கிடைத்த விட்ட சில மகிழ்ச்சிகள்.
ஏற்காமலும் சொல்லாமலும் விட்ட சில மன்னிப்புகள் ..
வரவேற்றும் வரவேற்கபடாமலும் விட்ட சில சந்திப்புகள் ..
கேட்டும் கேட்காமலும் விட்ட சில கேள்விகள்...
வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் விட்ட சில அன்புகள்.
கொடுத்தும் கொடுக்கப்படாமலும்விட்ட சில முத்தங்கள்..
தழுவியும் தழுவாமலும் விட்ட சில அரவணைப்புகள்....
நடந்தும் நடக்காமலும் விட்ட சில கைக்குலுக்கல்கள்...
பற்றியும் பற்றாமலும் விட்ட சில கரங்ககள்...
கொடுத்தும் கொடுக்காமலும் விட்ட சில நம்பிக்கைகள்...
கிளறியும் கிளறாமலும் விட்ட சில ரணங்கள்...
மறந்தும் மறக்காமலும் விட்ட சில நிகழ்வுகள்..
அடைந்தும் அடையாமலும் விட்ட சில ஏமாற்றங்கள்....
காட்டியும் காட்டாமலும் விட்ட சில கோவங்கள்...
விசாரித்தும் விசாரிக்காமலும் விட்ட சில நலன்
கள்...
நினைத்தும் நினைக்காமலும் விட்ட சில நினைவலைகள்....
பேசியும் பேசாமலும் விட்ட சில மன ஓட்டங்கள்.....
பார்த்தும் தவிர்த்தும் விட்ட பார்வைப்பரிமாற்றங்கள்..
எடுத்தும் எடுக்காமலும்விட்ட சில நிழல் படங்கள்.
இழந்தும் இழக்காமலும் விட்ட சில உறவுகள்...
பழகியும் பழகாமலும் விட்ட சில நண்பர்கள்....
மீட்டும் மீட்டகாமலும் விட்ட சில உணர்வுகள்...
பேசியும் பேசாமலும் தவிர்த்து விட்டப் பழங்கதைகள்..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டிய விட்ட வேறுபாடுகள்..
அமைந்தும் அமையாமலும்விட்ட சில அனுபவங்கள்..
.
பெற்றும் பெறாமலும் விட்ட சில பரிசுகள்...
புரிந்தும் புரியாமலும் விட்ட சில கோணங்கள்...
கூறியும் கூறாமலும் விட்ட சில நன்றிகள்...
எழுதியும் எழுதாமலும் விட்ட சில வரிகள்..
எல்லாம் இருந்துவிட்டுப்போகட்டும்...
என்று வரும் அடுத்த ஒன்றிணைதல்...