கைப்பேசி
கைப்பேசி
கைப்பேசியில் அப்படி என்ன இருக்கும்.....
கண்ணை கைப்பேசிக்கும்..காதை எனக்கும் கொடுப்பாய் என்பது என்ன நிச்சயம்...
நான் பேசியது செவி வழி நுழைந்து இதயத்தில் சேர்ந்ததா என்று எப்படி உறுதி செய்வது....
நான் புன்னகைப்பதை எப்படித் தெரிந்து கொள்வாய்..
முகம் பார்க்கா உரையாடல்கள் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும்......
என் ஸ்பரிசங்கள் சொல்வதாவது உணர்வாயா.......
நான் இல்லாத பொழுதில் என்னைப்பார்க்க விரும்பினால்..
கைப்பேசியில் பார்த்துக் கொள்வாயா...
என் குரல் கேட்க விரு
ம்பினால் கைப்பேசியில் அழைப்பாயா .
என் ஸ்பரிசங்களையும் கைப்பேசி உணர்த்துமா........
நான் திரும்பிவராத இடத்துக்குச் சென்றபின் ..
என் முகம் பார்த்துப் பேச ஆசைப்பட்டால்...
என் கண்ணில் தெரிவதையும் அறிய முற்பட்டால்....
என் தொடுதல் உணர்த்துவதையும் உணர பிரியப்பட்டால்........என்ன செய்வாய்....
ஒரு நொடி வருந்துவாயா...இல்லை அந்த வெற்றிடத்தையும்..உன் கைப்பேசி ஆக்கிரமித்துவிடுமா........
இருக்கும் போது கடந்து சென்றது போல்.
இல்லாத போதும் கடந்து செல்வாயா.....