காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
என் வாழ்வில்
நீ இன்னும் வந்து சேர்ந்திடா காலத்தில் அசரீரி ஒலித்தது இவ்வாறு
"ஒருத்தி வருவாள்
புத்தம்புது அழகானவள்
பூமி முன்னறியா வாசனை கொண்டவள்
உன்னில் அன்பை நிறைப்பாள்
மழலை செய்வாள்
மடியில் துஞ்சுவாள்
மிஞ்சி கெஞ்சுவாள்
கெஞ்சி மிஞ்சுவாள்
திளைத்துப்போன ஓர் நாளில்
வந்த சுவடின்றி விலகுவாள்
அவள் நிறைத்த அன்பில் நீ மூழ்கிச்சாவாய்"
அப்போதிருந்தே, விட்டுச்செல்லப்போகும் உன்னைக் காதலிக்கவே காத்திருக்கிறேன்
உன்னால் துயருறுவது மட்டுமே என்னின் விடுதலை!
வேறு உபாயங்களே இல்லையடி கண்மணி...