காதலித்துப் பாருமைய்யா!
காதலித்துப் பாருமைய்யா!


“கண்டவுடன் காதலாம்..
காணாமலே காதலாம்..
காசுக்குக் காதலாம்..
‘ஜாலி’க்குக் காதலாம்..
‘டைம் பாஸு’க்கு காதலாம்..
‘ரீச்சார்ஜு’க்குக் காதலாம்..
நாளொரு காதலாம்..
பொழுதொரு காதலாம்..”
என்றெல்லாம்…
கண்டபடி பேசி
காதலை கேலி பேசும்
காதல் எதிரியே!
ஆனாலும் அநியாயம்..
வாய்க்கு வந்ததெல்லாம்
வார்த்தையென பேசுகிறீரே?
காதலில் நடப்பதெல்லாம்
கண்றாவி ஆகி விடுமா?
‘ரியல்’ காதலில் உள்ளோர்
‘ரீச்சார்ஜ்’ செய்யச் சொன்னால்
‘ரீல்’ காதல் ஆகி விடுமா?
கடல் அளவு காதலில் உள்ளோர்
காசு பரிமாறிக் கொண்டால்
களவுக் காதல் ஆகி விடுமா?
தன்மானம் காக்கும் நோக்கில்
காதலைக் கைவிட்டால்
‘துரோகக் காதல்’ ஆகி விடுமா?
ஒரிரு காதல் தோற்றுப் போய்
மூன்றாம் காதல் தோன்றினால்
‘காதலே தொழில்’ என்று கலாய்க்கலாமா?
‘கண்டவுடன் காதல்’ என்று கிண்டலா!
காணாமலே எப்படிக் காதல் வரும்
காதலுக்கு இலக்கணம் வகுத்தது யார்?
பேசுவதை நிறுத்துமைய்யா
காதலித்துப் பாருமைய்யா!