இயற்கையின் வாழ்க்கை
இயற்கையின் வாழ்க்கை
எதுவுமே இல்லாதது,
இருக்கின்ற வாழ்வில்,
அவ்வப்போது மனதை மாற்றும்,
சுற்றியுள்ள இயற்கை,
சில நேரம்,
மரம் செடிகளிடமும்,
சில நேரம்,
மிதக்கும் மேகத்திடமும்,
சில நேரம்,
வான்வெளியிடமும்,
சில நேரம்,
நட்சத்திரங்களிடமும்,
சில நேரம்,
நிலவிடமும்,
சில நேரம்,
பறவைகளிடமும்,
சில நேரம்,
விலங்குகளிடமும்,
இருந்து மனதை மாற்றி கொள்கிறேன்,
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து,
கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையை வாழ்வதற்காக.....