இந்திய மனிதன்
இந்திய மனிதன்


பசுமை காணும் முயற்சியில்
பாங்காய் மனிதன்
உழைத்தாலே கணக்காய்
ஊதியம் கிடைத்திடுமே!
அன்னியர் வந்து
நம்மிடையே கிடக்கும்
பொருளை தேடி எடுத்துப்போக
நமக்கு மட்டும்
ஏன் அது புரிவதில்லை!
நீரும் நிலமும்
தெய்வமாக நிற்கையிலே
சாதி மதமும் பேதமும்
நமக்கெதற்கு?
ஐம்பூதங்கள்தான்
உலகின் உள்ள உயிர்கள்
யாவற்றிற்கும் அடிப்படை
என்றே உணர்ந்திட்ட
நாட்கள்தான்
இனி திரும்ப வந்திடுமோ1