இலங்கை துப்பாக்கி சூடு - 2019
இலங்கை துப்பாக்கி சூடு - 2019
உயிர்த்தெழுந்தும்...
உயிர்களை கைவிடுவதற்க்கு..
என்ன நிர்பந்தம் வந்திருக்கும் இயேசுவிற்க்கு....
உயிர்த்தெழுந்ததும் சிலுவையில் அறையப்பட கொழும்புவில் அவருக்கு அப்படி என்ன நேர்ந்திருக்கும்...
உயிர்த்தெழுந்த தன்னை சந்திக்கவந்தவர்களை..உயிர் பலிக்கொடுத்ததேன்..
வெள்ளி சிந்திய தன் குருதிக்காக...பல நூறுகுருதிகளை ஞாயிறன்று கேட்டதேன்........
யார்செய்த பாவத்திற்கு...இந்த தண்டனை...
கர்த்தருக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்றால்..என்ன பாக்கியம் செய்தார்கள் இவர்கள்....
வேதாகமம் சொல்கிறது கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்று...
எப்போது உயிர்ப்பிக்க போகிறீர்...உம்மில் மரித்தவர்களை...