என்பணியின் பணி
என்பணியின் பணி
ஒவ்வொரு மாணவனும் ஒரு நினைவு
வாலிபர்கூட்டம் வாழைத் தோட்டம்
சாய்ந்துவிடும் சிறுபுயலிலும்
வெட்டிச் சாய்க்க வீரர்களா இல்லை
அரசியல் கூட்டம் ஆளுமையின் போர்வையில்
அடுப்பறை அன்னையர் அன்பின் போர்வையில்
அவன் சிறகுகளை வெட்டிச் சாய்க்க
அதைக் கட்டிக் கோர்த்தது என்பணியன்றோ?
என்பணியின் பணியே அதுவன்றோ?
என் வேலை எனக்களித்த பெருமை அது
ஒவ்வொருவனும் ஒரு அனுபவம்
விந்தையாய் ஒருவன் வீரமாய் ஒருவன்
ஆசையுடன் ஒருவன் அழுகையுடன் ஒருவன்
வகுப்பறைக்குள் பூங்கொத்தாய் அன்று மலர்க் கூட்டம்
நினைவறையில் பூஞ்சிலிர்ப்பாய் இன்று நினைவோட்டம்
கல்லூரியில் கால்வைத்த நொடி எல்லாமே கற்பனைகள்
கடந்துவந்து நிற்கையில் மலரும் நினைவுகள்