எனக்குப் பெருமை
எனக்குப் பெருமை


மன்னர்கள் ஆண்டு கர்வம் கொண்ட நகரம்
ஆம், பாண்டியமன்னர்கள் பெருமை காத்த நகரம்
மாந்தர்கருத்தில் என்றும் தூங்காநகரம்
ஆம், மங்கலப் பெண்டிர் துணிவுடன் இரவிலும் சுற்றும் நகரம்
இறையாண்மையைப் போற்றும் இணையிலா நகரம்
ஆம், கோவில்கள் திருவிழாக்கள் எத்தனை எத்தனை
காவியங்கள் படைத்த நதரம்
ஆம், மக்கள்மனதில் வீரமுமுண்டு, நேர்மையுமுண்டு
இயற்கைஎழிலும் செயற்கை அரண்களும்
இணைந்து எழில்கொஞ்சும் நகரம்
ஆம், வைகைக்கரை தனில் மதுரை என்னும் மாபெரும் நகரம்
பிறந்த இடம் என்று என் பெருமை பேசும் நகரம்