என் இரண்டாம் காதல்
என் இரண்டாம் காதல்


எவ்வளவோ முயற்சித்தேன்
வேண்டாமென அறுதியிட்டுக் கூறினேன்
என்னவனுக்கு இழைக்கும்
துரோகம் என்றுரைத்தேன் !!!
என் இதயத்தில் அதற்கு இடமில்லை
என புலம்பித் தீர்த்தேன்
ஆனாலும் என்னையறியாமலே
என்னையிழந்து நிற்கிறேன்
கவிதையை காதலித்த பாவியாய் !!!