STORYMIRROR

SHIVANI PRIYANGA

Romance Fantasy

4  

SHIVANI PRIYANGA

Romance Fantasy

என் அந்தி நிலவே

என் அந்தி நிலவே

1 min
373

ஏனோ இன்று?

ஏனோ நான்,

எங்கோ அவனை

என் கண்ணில் தேட!

கண் அவனை தேட

கண்ணவன் ஆனானோ?

எத்தனை கேள்வி?

எத்தனை பதில்?

உன்னிடம் நான் கூற

நீ தூது போனால்,

வினாக்களின் விளக்கங்கள் கிடைக்குமோ?

காதலென்றால் கணத்தில் சொல்!

இல்லையென்றால் கனத்தில் சொல்!

உன் வட்டத்தை அவனுக்கு புன்னகையாய் கேட்டு..

எனக்கு விடை கேட்டு

நகராதே!

உன் பிறையில் அவன் முகம்

நான் ஏனோ காண்கிறேன்!

விண்நிலவே, வளையாமல்

விரைந்து தூது போ!

நித்திரை கலையாமல் 

கரைந்து தூது போ!

அந்த காதல் சொல்ல போ

என் அந்தி நிலவே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance