ஏதோ கேட்கின்றது
ஏதோ கேட்கின்றது
இன்னும் ஏதோ கேட்கின்றதுஉள்ளும் புறமும்வரம்புமேகம் துளைத்துஉயரப் பறக்குது அகலச்சிறகு கழுகுஎனினும் இன்னும் கொஞ்சம் இன்னும் உயரம் கேட்கின்றதுகாலச்சமுத்திரம் பிளந்து ஆழம் நீந்துது கூரலகுத் திமிங்கலம்எனினும் இன்னும் கொஞ்சம் இன்னும் ஆழம் கேட்கின்றதுமகிழ்பூமி கடந்துதூரம் கடக்குது பகற்கனவுப் பூச்சி எனினும் இன்னும் கொஞ்சம் இன்னும் தூரம் கேட்கின்றதுவிழிக்காத உறக்கம்தூங்காத கண்கள்அடங்காத ருசிபசிக்காத வயிறுதீராத காதல் சேராத தனிமைமுடியாத இன்பம்அகலாத துன்பம்தாங்காத வலிநோகாத சுகம்சாகாத வாழ்வுவாழாத மரணம்எனினும் இன்னும் கொஞ்சம் இன்னும் ஏதோ கேட்கின்றதுஉள்ளும் புறமும் இன்னும்எல்லாமும் வாயாகிஏதோ கேட்கின்றதுஇன்னும் ஏதோ கேட்கின்றது!