ஏக்கம்
ஏக்கம்

1 min

23.2K
அன்புள்ள நாளேடே,
விடுமுறையை எண்ணியே
ஏங்கிக் கொண்டிருக்கும் மனம்
விடுமுறை கிடைத்த போதும்
சிறைப் பறவையாய்
வீட்டினுள் அடைந்திருக்க
மனம் ஒப்பாமலே
வெளியுலகை எட்டிப் பார்த்து
நாசி தழுவும் புது காற்றினையே
பெருமூச்சாய் உள்ளிழுத்து
சக மனிதர் முகம் நோக்கும்
நாளதுவும் வாராதோ என
ஏங்கியே - கிடைத்திருக்கும்
பொழுது அனைத்தையும்
எதிர்பார்ப்போடே கழிக்கிறது !