STORYMIRROR

KANNAN NATRAJAN

Abstract

5  

KANNAN NATRAJAN

Abstract

ஆறு

ஆறு

1 min
459

ஆறு கடக்க எண்ணி

ஆறுமுகம் போகையிலே

ஆறு படகில் வந்த

ஆறு கன்னியர் முகம் பார்க்க

ஆறு ஆகி ஓடிய கண்ணீர்

ஆறு போன திக்கினில் கலக்க

ஆறுமுகம் பதைத்து

ஆறு முறை என்னவென்று கேட்க

ஆறு ரத்தினமான மீன்வலை

ஆறோடு போன கதை

ஆறுமுகத்திடம் பகர்ந்திடவே

ஆறுமுறை ஆறினுள் குதித்து

ஆறுமுகம் தேடிடவே

ஆறினுள் இருந்து

ஆறுமுகம் சின்னஞ்சிறிய சொப்பு

ஆறு மீன்வலை கொணரவே

ஆறு கன்னியரின் குழந்தை விளையாட்டுகண்டு

ஆறுமுகம் மனம் வருந்தியதே!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract