சூழலே, சுற்றுச் சூழலே
சூழலே, சுற்றுச் சூழலே
அரியவைகளை நிகழ்த்திட
அற்புதங்களை படைத்திட
ஆடம்பரம் இல்லா இயற்கை
ஆச்சர்யம் கலந்த மூலிகை
இன்னதென்று அறியாமல்
இன்னலிலும் தவித்து
ஈரமது இல்லாத விலங்குகளையும்
ஈகை செய்யும் வனமே
உண்மையை உரைத்திட
ஊண் உயர்களும் உணர்ந்திட
எண்ணிய எண்ணமெல்லாம்
ஏற்றுவித்த கொடிகளெள்ளாம்
ஐயமதை கொண்டு
ஐங்கரனைத்(யானை) தொழுது
ஒற்றுமையுடன் நின்று
ஒன்று கூடி காக்கும் வனமே
ஓங்கிய பசுமையும்
ஓங்காரமாய் மனதிலிருக்க
ஔடதமாய் வாழ்ந்திடும் பறவைகளும்
ஒளடம்பரமாய் ஆடிடும் இடமே
அஃதாகிய வனமே
இஃதே நகருதே இசையினிலே!
