சுற்றுலா
சுற்றுலா


காற்றில் பறந்து
கீழே விழுந்த விதை
பறந்து ஒவ்வொரு
இடமாகச் சுற்றுலா செல்ல
விரும்பித்தான்
மலைமேல் ஏறி
அமர்ந்த கணத்தில்
மேகக்கூட்டம்
கருக்கொண்டு
பிரசவித்த மழையில்
அருவியாய் ஒவ்வொரு
இடமாய் பார்த்து
களித்திருக்க உலகெங்கும்
கொரானா நோய்
பரவியிருக்க சுயநலம்
இல்லா விதைதான்
இரு கைகூப்பி
இறைவனாகிய இயற்கைத்
தெய்வங்களைத் தொழுது
வணங்கி நின்றதுவே!
விதை முளைக்க
ஆரம்பித்த நட்சத்திரத்தை
கணக்கிட்ட நிலவும்
நட்சத்திர உறவுகளும்
புவி வாழ
மரம் வளர்க்க
மானிடர்களுக்கு அறிவுரை
கூறி சென்றனவே!