சகோதரர்கள்
சகோதரர்கள்


அண்ணன்கள் ஒரு கட்டத்தில்
பாதுகாவலனாகவும் -
பாசம் காட்டுவதில்
அன்னையாகவும்
சண்டை வேளையிலே
சிலிர்த்து நிற்கும்
சிங்கங்களாகவும்
அக்கறை கொள்வதில்
மற்றோர் தந்தையாகவும்
அனுபவ அறிவுரை வழங்கையில்
ஆசானாகவும் - அனைத்துமாய்
ஆகி நிற்பவர்கள் - சகோதரர்கள் !