STORYMIRROR

SANTHOSH KANNAN

Classics

4  

SANTHOSH KANNAN

Classics

சாமி

சாமி

1 min
314

ஊரே கூடி நிக்க

உருமி சத்தம் எதிரொலிக்க

கூடி அமர்ந்த கூட்டத்திலே குதித்தெழுந்தான் கருப்பசாமி


வீச்சருவா வேண்டுமென்றான் விபூதிய அள்ளி எறிந்தான்

விண்ணும் மண்ணும் வியந்திடவே வீரவசனம் பேசி நின்றான்


அருவா ஆட்டத்துல

கொடுவா மீசை எல்லாம்

குனிந்து நின்னதையா

கும்புடு போட்டதையா


சாமி இல்லையினு

வெடப்பா திரிஞ்சவங்ய

கருப்பன் காலுலதான்

கெடையா கெடந்தாங்ய


அந்த ஒரு நிமிடம்

அருளும் வந்ததையா

ஆன்மீகம் எங்களுக்கு அருள்வாக்குத் தந்ததையா


நம்புனா இருக்கும் சாமி

நம்பாட்டி கிடக்கும் சாமி

இவக மட்டும் இல்லையினா மனுசனுக்கு ஏது பூமி



Rate this content
Log in

Similar tamil poem from Classics