அவனவள்!!!
அவனவள்!!!

1 min

424
திருமணக் கூட்டத்தில்
அவன் கண்கள் அவள் மீதே
மேடையில் அருகில் நின்றான்
உணவுண்ண பின் தொடர்ந்தான்!!!
கூட்டத்தில் அவள் மறைந்தாள்
தேடி மீண்டும்
கண்ணோடு கண் பார்த்தான்
அவள் விலகிச் செல்ல
கரம் பிடிக்க முயன்றான்!!!
கோவப் பார்வையில்
அவள் கண்கள்
கோவைப்பழமாகின!!!
சற்று விலகினான்
அவள் அவனைத்
தேடினாள்!!!
நெருங்கினால் விலகுவதும்
விலகினாள் நெருங்குவதும்
அவள் இயல்பென்றுணர்ந்த
காதல் கணவன் அல்லவா!!!
தூரம் அவர்களை விலகி நிற்க
அருகாமை பக்கம் வந்து
ஊடல் நீக்கி கூடச்
சொல்லி தீர்ப்பளித்தது!!!