அடம்பிடி
அடம்பிடி
வார்த்தை கற்றுத் தந்தவன் அல்ல வாழ்க்கை கற்றுத் தந்தவன் இவன் எழுத்தை அளித்து ஏழ்மை விலக்கி அறிவு புகட்டி அன்பை விதைத்து
மாணவர் மனதை மதியால் உழுது பெற்றவர் ஆன பேறு பெற்றோன் இடமாற்றம் இவன் இருக்கை வர இருதய வலிதான் இவனது பணி
செய்தி கேட்ட பிஞ்சின் நெஞ்சம் செய்வது அறியாது செல்ல விடாது அடம்பிடித்து அழுது புரண்டு மண்ணில் அமர்ந்து கண்ணீர் விட
கல்லின் ஈரமாய் கல்வித் துறை சொல்ல வார்த்தை இன்றி
மெல்லப் பின் வாங்கி நின்று இல்லாது செய்தது இட மாற்றம்
அடம்பிடி உனக்கான உரிமை பெற அடம்பிடி உன் தலைவனை விடாது அடம்பிடி உன்சொல் அரியணை ஏற அடம்பிடிகல்வியால் உலகு வெல்ல