அந்திவான கிறுக்கல்கள்
அந்திவான கிறுக்கல்கள்


அனணத்துக் கொள்ளும்
என் நினைவுகளை- நீ
புறக்கணித்தப் பொழுதுகள்.
குத்திக் கிழிக்கும்
கடிகார முட்கள்
நீ பேசாத நொடிகள்.
மனம் திறக்க
இதழ்கள் துடிக்கும்
உன்குரல் கேட்டால்
வார்த்தைகள் சிறைக்குள்
விரல்கொண்ட குரலேனோ
தீமூட்டி உறையும்
அனல்கொண்ட பெண்தேகம்
மெழுகாகக் கரையும்.
நிறுத்தாமல் இசைக்கிறாய்
அமுத ராகங்கள் தேடியே
துளைக்கின்றேன் உன்னை நான்
என் மௌனம் பேசும் மொழியிலே
இசைக்காமல் நிற்கிறாய்
ஊமை மூங்கில்கள் போலவே
என் கண் இமைக்குள்
உன்னை நிறைத்தேன்
நீ ஏன் சிரித்தாய்?
உன் தனிமை அறைக்குள்
மௌனம் நிறைப்பேன்
நீ மனம் திறந்தால்!