அன்பு வழி
அன்பு வழி


அன்பிலே விளைந்த நல்முத்து
அன்பாலே வளருமே நாளுமே
அன்பு தான் அனைவரையும்
அரவணைத்தே ஒன்றிணைக்குமே
அன்பே உலக வாழ்வின் ஆதாரமே !
இணைந்த கரங்களுக்குள்
இன்பமாய் தொடங்கிடும்
புது வாழ்வுமே !
ஆனந்தமும் ஆங்கே
புலனாகுமே !
புது வாழ்வும் தான்
என்றும் இனித்திடும்
தன்னலமிலா அன்பின் வழியிலே !