அணிலாடும் முன்றில்
அணிலாடும் முன்றில்
அதிகாலைச் சூரியன் அழகாய் உதித்ததே
அழகான மலர்கள் அன்பாய்ச் சிரித்ததே
அணிலாடும் முன்றில் அடடா ஈர்த்ததே
அவள்வரும் பாதையில் காதல் பூத்ததே
பார்வை எல்லாமே பாவை அவள்மீதே
பாதை நெடுந்தூரம் கடந்தும் காண்கிறதே
பதற்றம் எனக்குள்ளே ஏனோ வருகிறதே
பார்த்ததும் இதழ்கள் விரிந்தே சிரிக்கிறதே
அருகே வந்தாளே அழகாய் நின்றாளே
உருகிப்போய் நான் எனையே மறந்தேனே
கண்ணும் அடிக்குதே காதல் துடிக்குதே
மண்ணை மறந்து விண்ணில் பறக்கின்றேன்
குவியிதழ் விரித்துப் பேசத் தொடங்கினேன்
குமரியவள் கண்ணைப் பார்த்து அடங்கினேன்
அவளோட விழியில் நானே தெரிகிறேன்
இதுபோதும் என்று சற்றே ஒதுங்கினேன்
காதல் செய்தாலே கரத்தைப் பிடிக்கணுமே
மனதைக் கொடுத்தாலே மணமும் செய்யணுமே
பார்க்கும் விழியெல்லாம் ஈர்ப்பது இயற்கைதான்
பருவம் இதுவென்றே பக்குவம் அடைகின்றேன்.

