அணில்
அணில்


மரமெங்கும் தாவியே
கொட்டைகளை சேகரித்து
கன்னப் பைகளில் சேமித்தே
துள்ளியோடிச் சென்றே
சின்னஞ்சிறு குஞ்சுகட்கு
ஊட்டிவிட்டு - மீந்தவை
மண்ணிற்குள் பத்திரமாய்
ஆங்காங்கே புதைக்கப்பட
கால ஓட்டத்தில்
சேமித்தது எல்லாம்
மறந்தே போக
சாதகமான சீதோஷணத்தில்
புதையுண்டதெல்லாம்
மண்ணை முட்டித் துளிர்த்திட
புது கானகத்திற்கு
வித்திடும் சிற்றுயிர் -
அணில் !