அழகிய காடு
அழகிய காடு

அழகிய காடுகளே கொஞ்சம் அனுபவம் தாருங்களேன்
பழகிய பறவைகளும் தஞ்சம் அடைவதைப் பாருங்களேன்
நீரில் மிதக்கும் மீனாக
நெஞ்சம் மிதந்து செல்கிறதே
நேரில் காணும் காட்சியெல்லாம் இயற்கைக் காதல் கொள்கிறதே
உயர்ந்த மரக் கிளையினிலே உட்காரும் கிளிக்கூட்டம் எல்லாம் அயர்ந்து போகும் நேரத்திலே ஆறுதல் மொழியைத் தருகிறதே
வானில் மிதக்கும் விண்மீனும் வெள்ளைக் கொக்காய் நிற்கிறதே தேனில் ஊறும் செந்தமிழாய் தெவிட்டா இன்பம் தருகிறதே
அழகிய காடுகளே கொஞ்சம் அனுபவம் தாருங்களேன்
பழகிய பறவைகளும் தஞ்சம் அடைவதைப் பாருங்களேன்