STORYMIRROR

Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

அழகே உன்னை.... ஆராதிக்கிறேன்!

அழகே உன்னை.... ஆராதிக்கிறேன்!

1 min
293

நேர்மையே நீ....
என்னுடனே பிறந்து.... 

என் குருதியில் கலந்து.... 

என் சுவாசத்தில் பிணைந்து.... 

என் தாலோடு இணைந்து.... 

தவழ்ந்து வாழ்ந்திருப்பவள்!

 அழகே உன்னை ஆராதிக்கிறேன்! 

நீ.....

 பாலிலும் தூய்மையானவள்! 

மலரினும் மென்மையானவள்! 

நான் அழைத்த போது அப்படியே 

வெளி வருவாய்! 

அரிதாரம் என்றும் பூசிக் கொண்டதில்லை! 

பரிகாரம் ஒன்றும் தேடித் திரிந்தில்லை! 

பயந்து ஓடி ஒளிந்ததில்லை!

 நயந்து திரிந்து வளைந்த தில்லை! 

ஆளைப் பார்த்து அரண்டதில்லை! 

தாளைப் பார்த்து தடம் புரண்டதில்லை! 

நீ என்னோடு இருப்பதால் கர்வம் பிறக்கிறது! 

கயமை குணம் இறக்கிறது! 

 அவமானம் என்றும் தந்ததில்லை! 

வேறு வெகு மானம் எதுவும் தேவையில்லை! 

நீயே பெரும் வெகு மானம்! 

அழகே உன்னை ஆராதிக்கிறேன்! 

நீ என்றும் என்னுடனே கலந்திருக்க .....

ஆண்டவனிடம்  நானும் ....

நாளும் பிரார்த்திக்கிறேன்! 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational