Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harini Ganga Ashok

Drama Romance Classics

5.0  

Harini Ganga Ashok

Drama Romance Classics

வந்தியத்தேவன் என் கற்பனையில்

வந்தியத்தேவன் என் கற்பனையில்

2 mins
909


கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் மூலம் நமக்கு அறிமுகமானவர் வல்லவரையன் வந்தியத்தேவன். இன்றளவிலும் நம் மனதில் நீங்காமல் இடம் பெற்றுயிருக்கிறார். 


கல்கியின் கைவண்ணத்தில் வந்தியத்தேவன் மாபெரும்வீரனாகவும் அருண்மொழிவர்மனின் நண்பனாகவும் குந்தவை நாச்சியாரின் காதல் கணவராகவும் வலம்வருவார். 


என்னுடைய கற்பனையில் வந்தியத்தேவன் கதையை உங்களிடம் கொண்டு சேர்க்க எண்ணி இதனை படைத்துள்ளேன். 


என்னுடைய வந்தியத்தேவன் மிகவும் கோபக்காரர்.அவரின் கோபத்தைக் கண்டால் எதிரில் இருப்பவருக்கு சர்வமும் அடங்கிவிடும் எதையும் யோசித்து முடிவு எடுப்பவர் மாவீரரும் கூட. அருண்மொழிவர்மனின் நெருங்கிய நண்பர். குந்தவையின் மேல் கொண்ட காதலை மறைக்கவும் தெரிந்தவர். தன் பணி நண்பனுக்காகவும் நாட்டுக்காகவும் கடமையாற்றிவதே என்ற எண்ணத்தில் வாழ்பவர். 


ஒரு முறை அண்டை தேசத்தினர் சோழ தேசத்தின் எல்லையில் முற்றுகையிட்ட போது அருண்மொழிவர்மனுடன் எல்லைக்கு செல்ல புறப்பட்டான். குந்தவை தேவியார் தாமும் வருவதாக கூறினார். 


குந்தவை தேவி அறிவு, அழகு,போர் யுக்திகள், இசை,நடனம் என்று அனைத்திலும் திறமை வாய்ந்தவள். போரில் அவளின் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் மனதில் உறுதி பூண்டிருந்தாள். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள அவள் முயற்சி எடுத்தாள். 


குந்தவையின் திறமையில் நம்பிக்கை இருந்தாலும் அவளை போருக்கு அழைத்து செல்ல வந்தியனுக்கு மனம் வரவில்லை. காதல் கொண்ட நெஞ்சம் அல்லவா அவளுக்கு ஏதும் நேர்ந்துவிட கூடாது என்று மனம் பதைபதைத்து. 


எத்தகைய வீரனாக இருப்பினும் தன்னவள் என்று வரும்பொழுது கோழையாக மாறிவிடுகின்றனர். வந்தியனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவள் வரக்கூடாது என்று பிடிவாதமாக மறுத்தான். இறுதியில் வென்றது குந்தவையின் உறுதியான மனமே. 


அறிவிப்பு ஏதுமில்லாமல் நடைபெரும் முற்றுகை என்பதால் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து படையை வழிநடத்தினான். அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவனுடைய ஆளுமையை ரசித்தாள். 


போரின் போது வந்தியனை நோக்கி வந்த அம்புகளை லாவகமாக தடுத்து அவளவனின் உயிர் காதல். தன்னவளால் கிடைத்த மறுபிறப்பை ஆத்மார்த்தமாக எற்றான். 


அவளின் போர்த்திறன்களை பாராட்ட அவன் மனம் எண்ணியது. மனதில் உள்ளதை வெளியே கூறிவிட்டால் அவன் தான் வந்தியத்தேவன் இல்லையே.

அதற்கடுத்து வந்த நாட்களில் குந்தவையை சந்திப்பதை அறவே தவிர்த்தான். யாருமற்றவனுக்கு இளவரசியை மணமுடித்து தர மாட்டார்கள் என்பதே அவனின் எண்ணம். வந்தியனின் தோற்றம் அனைவரையும் வசீகரிக்க கூடியது. அவன்பால் ஓரு தலையாக காதல் கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம். 


சுந்தர சோழன் குந்தவைக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இச்செய்தியை வந்தியனிடம் கூறி தன் மனதையும் அவனுக்கு வெளிப்படுத்தினாள். 


நான் எந்த நாட்டிற்கும் ராஜா அல்ல என்ற அவனின் பதிலுக்கு உன் இதயத்தில் ராணி என்ற இடத்தை எனக்கு கொடு அது பொதும் என் ஜென்மம் முழுமையடையும் என்று அவளின் காதலின் உறுதியை அவனுக்கு உணர்த்தினாள். 


சுந்தரச்சோழனின் எதிர்ப்பையும் மீறி அரண்மனையை விட்டு குந்தவை தேவி வெளியேறினாள். வந்தியனும் அவனுடைய பொறுப்புகளை துறந்துவிட்டான். பொன்னி நதியின் ஆற்றங்கரையில் குடில் அமைத்து தங்களின் வாழ்க்கையை தொடங்கினர். வாழ்க்கை எப்பொழுதும் விருப்பப்பட்டவர்களுடன் இருக்கும்பொழுது மிக அழகாக தோன்றும். 


இலங்கையில் இருந்து நாடு திரும்பிய அருண்மொழிவர்மன் செய்தி அறிந்து நண்பனையும் தமக்கையையும் அரண்மனைக்கு அழைத்தபோது மறுத்துவிட்டனர். சுந்தர சோழன் எந்த நடவடிக்கையும் 

எடுக்கவில்லை. 


அவர்களின் அன்பின் அடையாளமாக அவர்களின் வாரிசும் பிறந்தது. குழந்தைக்கு அபியுக்தன் என்று பெயரிட்டனர். சுந்தர சோழன் தன் வம்சத்தில் உதித்த புது உயிர் அரண்மனையில் சகல செல்வங்களுடனும் வாழ வேண்டும் என்று எண்ணி குந்தவை மற்றும் வந்தியனை அரண்மனைக்கு அழைக்க முடிவு செய்தார்.


ஆனால் தம்பதியினர் இருவருமே மறுத்துவிட்டனர். சோழ குலத்தின் வாரிசை வளர்ந்த பின் அரண்மனைக்கு அனுப்புவதாக வாக்களித்தனர். 


அபியுக்தன் வளர வளர குந்தவையின் உடல்நிலை குறைந்தது. இறுதி நாட்களை நெருங்குகிறோம் என்று அவளுக்கு புரிந்துவிட்டது. தன்னவனையும் தன் அன்பின் அடையாளமாய் உருவான 

தனியாக விட்டு செல்ல அவளுக்கு 

மனது இல்லை. 


மனதில் உறுதியுடன் ஒரு முடிவு எடுத்தாள் அதன்படி அவளின் தோழி மணிமேகலையை சந்தித்தாள். மணிமேகலை வந்தியத்தேவனின் மீது காதல் கொண்டிருந்தவள். இதை குந்தவையும் அறிவாள். அவள் அரண்மனையை விட்டு வெளியேற துணை புரிந்ததும் மணிமேகலையே. 


மணிமேகலையிடம் தங்களின் வாரிசு தாயில்லாமல் வளரக்கூடாது அவனுக்கு தாயாக நீ இருப்பாயா என்று கேட்டாள். முதலில் மறுத்தாலும் குந்தவை தான் பிடிவாதத்தால் அவளை சம்மதிக்கவைத்தாள். 


வந்தியத்தேவனையும் அபியுக்தனையும் மணிமேகலையின் கைகளில் ஒப்படைத்துவிட்டு இவ்வுலகத்திடமிருந்து விடைபெற்றாள். 


காதல் கொண்ட மனம் எப்பொழுதும் தன்னவர்களின் நலனையே விரும்பும். எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காது. 


காதலில் வெற்றி தோல்வி எல்லாம் கிடையாது. அது ஒரு அழகான உணர்வு...


Rate this content
Log in

Similar tamil story from Drama