வெண்ணிலவும் வானவில்லும்
வெண்ணிலவும் வானவில்லும்


வானதி விரைவாக வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள். அப்போது மீனுக்குட்டி வந்து அம்மா என்னோட ஷூ லேஸை போட்டு விரும்பாத என்றாள். புன்னகையுடன் இதோ வரேன்டா கண்ணு என்று கூறிவிட்டு அவளுடைய தேவையை நிறைவு செய்தாள்.
வானதி என்ன பண்றே? காலையிலேர்ந்து எனக்கு காபியே குடுக்கல. அறையிலிருந்த அத்தையின் குரல். இதோ வந்துட்டேன் அத்தே என்று சொல்லிக்கொண்டே சென்று காபி கொடுத்தாள்.
வானதி யாரிவள்? வானவில்லினைக் கண்டால் மகிழும் குழந்தைகள் போல வானதியைக் கண்டால் மகிழும் அவள் குடும்பம்.
வானதியும் அப்படித்தான். சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிதரும் நிலவுபோல தன் குடும்பத்தாரின் மகிழ்ச்சி ஒன்றே தனக்கு பலம் என்பவள் வானதி. ஆம் வானதி போல எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் இவ்வுலகில்.
தன்னையே உருக்கி தன்னலம் கருதாமல் குடும்ப நலனே தன்னலனாக நினைத்து வாழும் அனைத்துப் பெண்களுக்கும் இக்கதை சமர்ப்பணம்