Rajalakshmi Srinivasan

Others

4.8  

Rajalakshmi Srinivasan

Others

மனித நேயம் எங்கே?

மனித நேயம் எங்கே?

2 mins
22.7K


மல்லிகா வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தாள். அன்று பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் நின்று கொண்டே பயணித்து தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள். பூவை கசக்கி எறிவது போல இவளை எறிந்துவிட்டு சென்றது பேருந்து.

     வீட்டிற்குள் நுழையும் போதே மாமியாரின் புலம்பல் காதுகளில் விழ கண்டுகொள்ளாமல் தன் அறைக்குச் சென்றாள். மணி இரவு 7.30 ஆகிவிட்டது. கணவன் கட்டிலில் படுத்தவாறு கைப்பேசி பார்த்துக்கொண்டு இருந்தான். மல்லிகா ஏன் இவ்வளவு நேரம்? கைப்பேசியிலிருந்து கண்களை எடுக்காமல் கேட்டான் கணவன். 

 பதில் கூறாமல் குளியலறை சென்று குளிதாதுவிட்டு வந்தாள். நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே? என்றார் கணவன். ஏங்க உங்க அம்மாவுக்கு உலகம் தெரியாது. அவங்க கேட்ட பரவாயில்லே. நீங்களுமா?.... என்று இழுத்தாள். சரி சரி நேரமாச்சு போய் டிபன் செஞ்சு அம்மாவக்கு, பிள்ளைகளுக்கு கொடுத்துட்டு என்னை கூப்பிடு நான் வந்து சாப்பிடுகிறேன் என்றான்.

     அந்த வீட்டில் ஒருவர் கூட காபி போட்டுக் தரட்டுமா ? என்று ஒரு வார்த்தையும் அவளை கேட்கவில்லை. தன் கடமைகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு தூங்கி, காலையில் 4 மணிக்கு எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றாள். மீண்டும் மாலையில் பேருந்து நிலையத்தில் நின்றபோதே உடல்வலி, தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்தது.

  மல்லிகா அதைக் கவனிக்காமல் வழக்கம் போல் தன் வேலைகளை சர் செய்துவிட்டு தூங்கினாள்

 காலை மணி 7 மல்லிகா எழவில்லை. கணவன் அவளை எழுப்பி என்ன இப்படி தூக்கமே? எல்லா வேலைகளையும் யார் செய்வது? என்று கேட்டான் அலறி அடித்து மல்லிகா எழுந்து வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல வாசலுக்கு வரும்போது மயங்கி விழுந்து விடுகிறாள். வீட்டில் மாமியார் தவிர அனைவரும் சென்றுவிட்டனர். 

    பக்கத்து வீட்டு கவிதா மல்லிகா விழந்திருந்ததைப் பார்த்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். டிவி ப்ர்த்துக் கொண்டிருந்த மாமியார் என்ன ஆச்சு? இன்னைக்கு ஆபிஸ் போலேன்னா சம்பளத்தை புடிச்சிட போறான். கிளம்பு என்று கூறினாள். 

  மல்லிகாவிற்கு காய்ச்சல் இருந்தது. பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கும் சென்று சோதித்த போது மல்லிகாவிற்கு கொரோனா பாஸிடிவ் உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்,. ஓன்றும்அ பயப்பட வேண்டாம் வீட்டிலேயே தனித்திருந்து மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். வீட்டிற்குள் மல்லிகா நுழையும் அவள் உடைகள் வைத்திருந்த பெட்டி அவள் முன் வந்து விழுந்தது. அவளின் மாமியார் வாசலை அடைத்துக்கோண்டு நின்று கொண்டு உள்ளே வந்து எல்லாருக்கும் கோடத்துடாதே. பிழைத்துகிடந்தால் வீட்டிற்கு வா. இல்லேன்னா அவ்வளவுதான் என்றாள். 

நீதி

இது ஒரு கதை தான். ஆனால் மக்களே நோயுள்ளவர்களை உங்களால் கவனிக்க இயலாவிட்டாலும் அவர்களை ஒதுக்கி மனநோயை ஏற்படுத்தி கொல்லாதீர்கள்

 அ



Rate this content
Log in