ஓய்வு
ஓய்வு
காலை மணி ஆறு. மாலதி வழக்கம்போல் எழுந்து தன் கடமைகளை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல தயாரானாள். மாலதி பெயரைக் கேட்டவுடன் 25வயது இருக்குமோ ? என்ற உங்கள் சந்தேகத்திற்குப் பதில் இதோ! மாலதி 58 வயது நிரம்பியவள். அலுவலகத்திலிருந்து எப்போது ஓய்வு கிடைக்கும்? என்று எதிர்பார்க்கும் சராசரி பெண்மணி. மாலதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருவருமே திருமணம் முடிந்து அவரவர் வேலை செய்யும் ஊர்களிலேயே இருக்கின்றனர். மாலதிக்கு பேரன்கள்,பேரன்கள் என்று கலகலப்பான குடும்பம்.
அலுவலகத்தின் சீனியர் மாலதி. அவளைக் கேட்காமல் யாரும் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். அலுவலகமே அவளின் ஆலோசனைகளுக்குக் காத்திருக்கும். இப்படி எப்பவுமே busy ஆ இருந்த மாலதிக்கு பணிஓய்வு தேதியை சொல்லிட்டாங்க.
அந்த நாள் வந்தது. ஆம் மாலதிக்கு இன்றைக்கு பணிஓய்வு கொடுத்து வீட்டி
ற்கு அனுப்பப்போகிறார்கள். அலுவலக ஊழியர்கள் அனைவரும் வருத்தத்தோடு மாலதியிடம் பேசிக் கொண்டு இருந்தனர். அனைவரிடமும் பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தாள் மாலதி.
அலுவலக ஊழியர் ஒருவர் வந்து எல்லாரையும் மேலாளர் கூப்பிடுகிறார் வாருங்கள் என்று அழைத்தான். மாலதியை அழைத்துக் கொண்டு அனைவரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர். விழா மேடையில் மேலாளர், உயரதிகாரிகள்,மற்றும் மாலதி அனைவரும் அமர்ந்திருந்தனர்.
விழா தொடங்கி மாலதியைப்பற்றி அனைவரும் புகழ்ந்து பேசினர். இறுதியாக மாலதியைப் பேச அழைத்தனர். மாலதியூம் உற்சாகமாக பேசி அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தாள். விழா இனிது முடிந்து மாலதியை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு வந்தனர்.
மறுநாள் காலை வழக்கம் போல் மாலதி சமையலை முடித்துவிட்டு தன்