சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை


கலா சங்கடத்துடன் பார்த்தாள். அவள் கொழுந்தன் மனைவி வேலைக்குச் செல்வதால் மாமியாரை அவள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலைமை. அவளுக்கு யோசித்துக் கூறவும் நேரம் இல்லை.
இந்தச் சூழலின் மறுபக்கம். கலாவிற்கு ஒரே பெண். அவளின் படிப்பு முழுவதும் கலாவின் கொழுந்தன் தான் பொறுப்பேற்று படிக்க வைத்தார். அவளின் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.
அவள் சரி என்று கூறவில்லையென்றாலும் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு. அவள் கையில் ஒன்றும் இல்லை. மின்னல் வேகத்தில் எடுத்த முடிவில் மாமியார் அவளிடம்.
ஆரம்பத்தில் சரியாக போய்க்கொண்டிருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல சின்ன சின்ன கசப்புகள் தோன்றின. 'வயதானவர்கள் குழந்தை போல ' என்று கூறக் கேட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லை அவளுக்கு.
சிறு சிறு சங்கடங்களினால் மாமியாரின் உடல்நிலை பாதிப்படைந்தது. அப்போது கலா தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம்? என்பதை உணர ஆரம்பித்தாள். கலாவின் மகள் கூறிய அறிவுரையே அவள் மாற்றத்திற்குக் காரணம்.
இப்போது மாமியாரைப் பெற்ற தாய்போல் கவனித்துக் கொள்கிறாள். சின்னபிள்ளைகளுக்கு என்ன தெரியும்? என்கிற காலம் மாறிவிட்டது.
சகிப்புத்தன்மையே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து என்பதை கலாவின் மகள் அவளுக்கு உணர்த்திவிட்டாள்