கோடை
கோடை
அடியே கமலா ! என்ன பண்ணின்டு இருக்கே? சித்திரை வெயில் மண்டையை பொளக்கறது.கையெல்லாம் நம நமன்னு இருக்கு ஏன் தெரியுமோ?. எனக்கு தெரியாதா மாமி.
"கோடை வெயில் காலம் வடாம் போடும் காலம் ' அதானே உங்களுக்கு அப்படி இருக்கு. சரியா சொன்ன கமலா நீதான்டி என்னோட பிராண தோழி. சரி சாப்டுட்டியா? கிளம்பு கடைக்குப் போய் வடாத்துக்குத் தேவையான சாமானெல்லாம் வாங்கிண்டு வந்துள்ளாம்.
மாமியும், கமலாவும் சேர்ந்து கோடை வெயில வீணாகாம வடாத்த பிழிஞ்சிட்டா. அப்பாடா! ஒரு வழியா எல்லாத்தையும் முடிச்சாச்சு
சரிடி கமலா எனக்கு சத்த நேரம் படுத்துக்கணும். மாமா 5 மணிக்கு ஆபிஸ்லேர்ந்து வந்துடுவார். காபி போட
்டுத் தரணும். அதுக்குள்ள உடம்பை சத்த சாச்சிட்டு வரேன். நீயும் போய் படுத்துக்கோ
மாமா வந்து கதவைத்தட்டும் சத்தம் கேட்டு கமலா விழித்துக் கொண்டு ஓடி வந்தாள். என்ன மாமா? ரொம்ப நேரம் கதவை தட்ற சத்தம் கேக்கறதேன்னு வந்து பாத்தேன். மாமி கதவைத் தொறக்கலையா ? இல்லமா பத்து நிமிஷமா தட்றேன் பதிலில்ல. காலைலேர்ந்து வடாம் பிழிஞ்சி டயர்ட் ஆயிட்டா போல
இருங்கோ புழக்கடை பக்கமா போய் நான் பாக்கறேன்.கமலா சென்று உள் தாழை விலக்கி கதவைத் திறந்து மாமி எழுந்திருங்கோ மாமா ரொம்ப நேரமா கதவைத் தட்றார் கேக்கலையா?
என்று கூறி கதவைத் திறந்தாள்.
குறிப்பு: