வல்லன் (Vallan)

Thriller

2  

வல்லன் (Vallan)

Thriller

வெல்கம்

வெல்கம்

3 mins
380


ஹாய் டா ராகேஷ் எப்டி இருக்க உன்ன பாத்தே ரொம்ப நாள் ஆச்சு. என்ன அய்யா அவ்ளோ பிஸியோ...


அப்டிலாம் இல்லடி நீ வேற ஏன் காமெடி பண்ணீட்டு இருக்க. கொஞ்சநாளா ஒரே மைன்ட் அப்செட் அதான் வெளிய எங்கையும் அதிகம் வரது இல்ல.


ஓ.‌‌.. என்ன லவ் ஃபெயிலியரா டா உனக்கு? எவ அது உன்னைய ஏமாத்தினது சொல்லு நா பேசிக்குறேன் என ஏற்கனவே நொந்து போன ராகேஷை வகையாக கலாய்க்க ஆரம்பித்தாள் மஞ்சு.


ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் படிக்கறாங்க, ஆனா இப்ப வேலைக்கு போற இடந்தான் வேற, இருந்தாலும் ரெண்டு பேரும் மீட் பண்ணிப்பாங்க.


மஞ்சுக்கு ராகேஷ் மேல ஒரு கண்ணு, ஸ்கூல்லயும் சரி காலேஜ்லயும் சரி வேற எந்த பொண்ணையும் அவன்கிட்ட நெருங்கவிட்டதே இல்ல அவ. இப்பவும் அவன் தனியா இருந்தாலும் இவ எப்பயாவது பாக்கும்போது எதாவது செட் ஆகுற கன்டிசன்ல இருந்தாலும் பிச்சுவிட்ருவா. அவ்ளோ நல்லெண்ணம்.


இப்ப ராகேஷ், ஏன்டி நீ வேற உயிர எடுக்கற, எனக்கு தான் ஒருத்தி கூட பக்கத்துல வராத மாதிரி நீ தான் சூனியம் வச்சுட்டயே அப்றம் ஏன் அதயே மறுபடி கிளறர.


இல்லாட்டி மட்டும் உன் பின்னாடி அப்டியே க்யூல நிக்கறாளுங்க போடா போடா...


டேய் ராக்கேஷ் நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஒரு ஒன் டே ட்ரிப் ப்ளான் பண்ணலாமா உனக்கும் ஸ்ட்ரஸ் ரிலீஃப்பா இருக்கும்

டேய் ரொம்ப சீன் போடாத, நீ இவ்ளோ பில்டப் பண்ணாத கம்முனு வாடா போயிட்டு வருவோம்

சரி போகலாம், அப்ப எல்லார்கிட்டயும் சொல்லீடு

ஒரு நாள் ஈவ்னிங் டைம், ராகேஷ் மஞ்சு இன்னும் அவங்க ப்ரண்ட்ஸ் வசந்த், சஞ்சு, பிரபா எல்லோரும் ஒரு லோக்கல் ட்ரிப் ப்ளான் பண்ணி தயாராகிட்டாங்க. தடா சைடு போலாம்னு ப்ளான். அத எல்லாம் முடிச்சுட்டு நாம தங்கறத்துக்கும் ஒரு வில்லா புக் பண்ணியாச்சு. அன்னைக்கு நைட் ஸ்டே வில்லாவில், காலைல அருவிக்கு குளிக்க போறோம், அதெல்லாம் முடிச்சுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்குக் கிளம்பறோம் அதான் ப்ளான்.


எல்லாருமே நைட் அந்த வில்லாவுக்கு வந்தாச்சு, எல்லாரும் முன்னாடியே இறங்கி உள்ள போயிட்டாங்க. ராகேஷ் மட்டும் கார் பார்க் பண்ணீட்டு கடைசியா தனியா வந்தான்... அப்போ திடீர்னு அவனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஜீவ்வுனு ஆகிடுச்சு, காத்து ரொம்ப வேகமும் இல்ல மெதுவாவும் இல்ல... யாரோ என் காதுகிட்ட வந்து "வெல்கம்" னு ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னமாதிரி இருந்துச்சு. இருந்துச்சுனு சொல்லறதவிட உண்மையாவே செல்லுச்சுனு வச்சுக்கலாம்.


அவனும் அதை ஒன்னும் பெரிசா எடுத்துக்கல, ரூம்க்கு உள்ள வந்துட்டான். மத்தவங்க யாரையும் காணல அங்க... எல்லாரையும் கூப்பிட்டான் பதிலுக்கு ஒரு சத்தம் கூட இல்ல... அவனக்கு அப்டியே அல்லுவுட்ருச்சு...


யாருமே இல்லனு மறுபடி வெளிய வந்து கார் இருக்கானு பாத்தா காரையும் பார்க்கிங்ல காணோம். எங்கயோ செமத்தையா மட்டிக்கிட்டேன்னு பையன் நடுங்கிட்டான்.

மறுபடி அந்த வீட்டுக்குள்ளே போனான், உள்ளே வேறு ஆட்கள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. கதவு படீரென மூடியது... ஓடிச் சென்று திறந்தான் முடியவில்லை... தாழ்பாளும் போடவில்லை ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை.

அப்போது மெல்லியதாக ஒரு பெண்ணின் சிரிப்புக் குரல்... எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை ஆனால் அவன் காதருகே வந்து யூ ஆர் ட்ராப்ட் என்றது.


அதைக் கேட்டதும் அவனக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது. ஏன் இப்படி? எதற்கு நான் மட்டும்? என நிறைய கேள்விகள் அவன் மண்டையக் குடைந்தது. எதற்கும் விடை இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியே போகவும் முடியாது. உள்ளே போன மற்ற எல்லாரும் எங்கனும் தெரியாது.


அந்த வீடு முழுக்க சுத்தினான்... எதும் கிடைக்கல. எல்லா இடத்துல தேடியும் அவங்கள காணோம். அவ்ளோதான் நம்ம கதை இத்தோட முடிஞ்சுதுனு முடிவு பண்ணீட்டான்.


அப்டியே தேடிட்டு இருக்கும் போது ஒரு அண்டர்கிரவுன்ட் ரூம் தெரிஞ்சுது. அந்த கதவு பூட்டிருந்தமாதிரி தெரியல சோ மத்தவங்க அங்க இருக்காங்களானு பாக்க நினைச்சான் ஆனா மனசு வேணாம் அங்க போகாதனு தடுத்துச்சு. நெஞ்சு வேற லபக்லபக்னு கத்தற சத்தம் வெளியவரை கேட்டுச்சு. எப்படியோ மனச திடப்படுத்திட்டு கீழே படில இறங்கினான். முடை நாத்தம் அப்டியே மூக்க பிடிச்சுட்டு உள்ளே இறக்கினான், பெருச்சாளிகளும் வௌவால்களூம் குடியிருந்த இடம் போல அது. கதவண்டை வந்து மெதுவா கை வைத்தான் விர்விர் னு கதவு கத்திக்கிட்டே திறந்துச்சு. அவனக்கு நெஞ்சு அப்படியே பட்டுனு நின்னுடும் போல இருந்துச்சு.

தட்டுத் தடுமாறி உள்ளே காலை எடுத்து வைத்தான், இருட்டுல ஒன்னுமே தெரியல. மொபைல் எடுத்து ஃப்ளாஷ் லைட் ஆன் பண்ணா சர்னு ஏதோ முன்னாடி ஓடுது... உடனே அந்த பக்கம் லைட் அடிச்சு பாத்தா ஒன்னுமே இல்ல. மொபைல்ல வேற சார்ஜ் 10% தான் இருக்கு. அம்புட்டுதான் இன்னையோட கதை முடிஞ்சுதுனு நினைக்கும் போது பக்கத்துல ஒரு கண்ணாடி ரூம் போல இருந்துச்சு.

சரி அந்த ரூம் கதவை திறந்துதான் பாப்போம் உள்ள என்ன இருக்குனு. கரெக்ட்டா மொபைல் பைபை சொல்லிட்டு போயிடுச்சு. கையால அந்த கண்ணாடி சுவரை தொட்டுப்பாத்துக்கிட்டே கதவு எங்க கருக்குனு தேடினேன். கொஞ்ச தூரம் நகர்ந்த உடன் அந்த ரூம்க்குள் ஏதோ சிறிய வெளிச்சம் போல தோன்றி மெல்ல மெல்ல அது நெருங்கி வருவது போல இருந்தது.

அருகிலேயும் வந்துவிட்டது, இப்போ அவனக்கும் அந்த உருவத்துக்கும் நடுவுல இருக்கறது அந்த கண்ணாடி சுவர் தான். அகலமா‌ ரெண்டு கைகளையும் நீட்டி கட்டி அணைப்பது போல வந்து சுவரை முட்டி நின்றது. இருட்டிலே உருவம் மட்டுமே தெரிந்தது முகம் தெரியவில்லை.

ஹே ராகேஷ் ஐ லவ் யூ ன்னு சொல்லியது அந்த உருவம்...

அப்படியே மயங்கி விழுந்துவிட்டான் அதிர்ச்சியில்...


மயக்கம் தெளிந்து பார்த்தால் அவன் தலைமாட்டில் மஞ்சு உட்கார்ந்திருக்கிறாள்.Rate this content
Log in

Similar tamil story from Thriller