துலாபாரம்
துலாபாரம்


டாக்டர் எனக்கு ஏன் இந்த மாதிரி குழந்தை பிறந்திருக்கு? இது பிழைக்குமா? என கேட்டாள் கயல்விழி தனக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் கலாவிடம்.
கயல் உன் குழந்தை எடை குறைவாக பிறந்ததால் உனக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது? சாதாரணமா குழந்தைகள் பிறக்கும் போது 2.5 முதல் 3 கிலோ எடை இருப்பாங்க. உன் பையன் 1.75 கிலோ எடை இருக்கான். இன்குபேட்டரில் கொஞ்ச நாளைக்கு வைச்சி கவனமா பாத்து வந்தோம்னா அவன் எடை கூட வாய்ப்பு இருக்கு.
l-align-justify">நீ தைரியமா இரு.
டாக்டர் நான் பண்ணின தப்பு தான் எனக்கு இந்த மாதிரி குழந்தை பிறந்திருக்கு. காய்கறி மார்கெட்டில் காய்கறி விற்கிற நான் வாடிக்கையாளர்களை ஏமாற்றி எலக்ட்ரானிக் தராசில் தில்லுமுல்லு பண்ணி எடை குறைவா காய்கறி விற்றேன். அதுக்குத் தான் ஆண்டவன் என்னை தண்டிச்சிருக்கான்.
இனி ஒழுங்கா எடை போட்டு விற்பாயா?
சரி மேடம்!
தப்பை திருத்திக்கிட்டா ஆண்டவன் மன்னிப்பான்.