Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

டீ

டீ

2 mins
13


லதா,நேரமே எழுந்து விட்டாள்.அவள் அவளுடைய அண்ணன் கூட ஒரு சவால் விட்டு இருந்தாள்.

அதாவது அம்மா எழுந்து காப்பி போட்டு கொடுப்பதற்கு முன்பு லதா எழுந்து வந்து அவளுக்கும் அண்ணனுக்கும் காப்பி போட்டு கொடுக்க வேண்டும்.

அவளுக்கு சமையல் செய்வது மிகவும் பிடிக்கும்.ஆனால் அம்மா,உனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலை என்று சமையல் அறை பக்கமே விட மாட்டார்.அவளுக்கும் பதினான்கு வயது.இப்போது கற்று கொள்ளாமல் எப்போது.

நீ பாட்டி வீட்டுக்கு போனால் அங்கு கற்றுக்கொள் என்று அம்மா சொல்லி விட்டாள்.மகளுக்கு சொல்லி கொடுக்க அம்மாவுக்கு பொறுமை இல்லை.

அதனால் முதல் நாளே பாட்டிக்கு போன் செய்து காபி எப்படி போட வேண்டும் என்று சொல்லுங்க பாட்டி என்று கேட்க, பாட்டி நீ டீ போடு அது இன்னும் சுலபம் என்று டீ போடுவதை சொல்லி கொடுக்க,அதை ஒரு காகிதத்தில் குறித்து கொண்டாள்.

அம்மா இன்னும் எழுந்து வரவில்லை என்று உறுதி படுத்திக்கொண்டு,அண்ணனை பல் தேய்த்து தயாராக இருக்கும் படி சொல்லி விட்டு,சமையல் அறைக்குள் வந்தாள் பால்,நேற்றைய மீதி இருந்தது,அதில் முக்கால் வாசி எடுத்து,கூட ஒன்றரை டம்ளர் தண்ணீரை சேர்த்து டீ வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தாள்.

அடுப்பு எப்படி பற்ற வைப்பது என்று அண்ணனை கேட்க,அவன் பற்ற வைத்து கொடுத்தான்.அடுப்பில் வைத்த பாத்திரத்தில்,மூன்று கரண்டி டீ இலை,கூட இரண்டரை கரண்டி சக்கரையும் போட்டு,ஒரு கரண்டியை போட்டு கலக்க பாலும் நீரும் கொதித்து பொங்க,அடுப்பை அணைத்து விட்டு,பார்த்தால்,பாத்திரத்தை எப்படி எடுத்து கீழே வைப்பது என்று திண்டாடி கொண்டு இருக்கும் போது அண்ணனும் அம்மாவும் பின்னாடி வந்து நிற்க,லதா விழிக்க,அம்மா துணியை பிடித்து இறக்கி வைத்து,வடி கட்டுவது எப்படி என்று காண்பிக்க,லதா கையை சுட்டுக்கொண்டே வடிகட்டிய பிறகு,இரண்டு டம்ளரில் ஊற்ற,அம்மா ஒன்றும் அண்ணன் ஒன்றும் எடுத்து குடித்து பார்த்து விட்டு,சூப்பர் லதா,அம்மா போடும் டீ போலவே இருக்கு என்று பாராட்ட,லதாவுக்கு தலைகால் புரியவில்லை.அப்படி ஒருமகிழ்ச்சி,

பாட்டியிடம் சொல்லி மகிழ்ந்தாள்.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract